அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். வாஷிங்டனின் பதவியேற்ற உடனேயே, டொனால்ட் டிரம்ப் தனது தொடக்க உரையை நிகழ்த்தினார். முதலில் ஜே.டி.வன்ஸ் துணை அதிபராக பதவியேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, இந்திய நேரப்படி நேற்று (ஜன., 20) இரவு 10.30 மணிக்கு டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றார். தொடர்ந்து முன்னாள் அதிபர் ஜோ பிடென் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாற்றியமைக்க 80 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.