21 துப்பாக்கி குண்டுகள் முழங்க டிரம்புக்கு உற்சாக வரவேற்பு

68பார்த்தது
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்றிரவு (ஜன., 20) இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு பதவியேற்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ரோபர்ட் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உடனடியாக மரைன் பேண்ட் குழுவினர் தேசிய கீதத்தை இசைக்க, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பதவியேற்ற சில மணி நேரத்திலேயே டிரம்ப், தனது அலுவலகத்திற்கு சென்று 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

தொடர்புடைய செய்தி