போர் நிறுத்தத்தை மீறிய இஸ்ரேல், ஈரான் - டிரம்ப் அதிருப்தி

59பார்த்தது
அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல்களை கடுமையாக விமர்சித்துள்ளார். "போர் நிறுத்தம் ஒப்புக்கொண்ட பிறகும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்கியது எனக்கு பிடிக்கவில்லை. 2 நாடுகளும் என்ன செய்கிறார்கள் என்பதே தெரியாமல் நெடுநாட்களாக சண்டையிட்டு வருகின்றன என தெரிவித்தார். மேலும், விழாத ஒரு ராக்கெட்டிற்காகவே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தால், அது தனக்கு மிகவும் அதிருப்தியளிக்கும் என கூறினார். இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமைதிக்கான முயற்சிகளை சீர்குலைக்கின்றன எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி