அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போல தோற்றமளிக்கும் ஒருவர் பாகிஸ்தானில் குல்பி விற்கிறார். கச்சா பாதம் என்ற பாடல்களால் பிரபலமான அவர் தெருவோர வியாபாரியாகவும் தனது தொழிலைத் தொடர்ந்து வருகிறார். தன் வண்டியில் பாடல்கள் பாடிக்கொண்டே அவர் குல்ஃபி விற்கிறார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சாஹிவால் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், உள்ளூர் மக்களால் 'சாச்சா பக்கா' என்று அழைக்கப்படுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களை கவர்ந்து வருகிறது.