இந்தியா-பாகிஸ்தான் உடனான மோதலில் இந்தியா டிரம்ப்பை மத்தியஸ்தம் செய்ய கேட்கவில்லை என சசிதரூர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தீவிரவாத ஆதரவு பற்றி உலக நாடுகளுக்கு விளக்க சசிதரூர் தலைமையிலான குழு அமெரிக்கா சென்றடைந்த நிலையில், வர்த்தகத்தை காட்டி போரை நிறுத்தினேன் என டிரம்ப் கூறிவருவதை சசிதரூர் மறுத்துள்ளார். அமெரிக்க மண்ணில் நின்று டிரம்ப் சொல்வது தவறு என இந்தியா தெளிவுபடுத்தியிருப்பது கவனம் பெற்றுள்ளது.