அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இளைய மகள் டிஃப்பனி டிரம்ப் கடந்த வியாழக்கிழமை ஆண் குழந்தையை பெற்றெடுத்ததாக நேற்று (மே 16) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அக்குழந்தைக்கு 'அலெக்சாண்டர் டிரம்ப் பவுலோஸ்' எனவும் பெயர் வைத்துள்ளனர். இது அதிபர் டிரம்பின் 11-வது பேரக்குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. டிஃப்பனி, அதிபர் டிரம்புக்கும் அவரது இரண்டாவது மனைவியான மார்லா மேப்பிள்ஸுக்கும் பிறந்தவர் ஆவார்.