இமாச்சல பிரதேசம்: மணாலி அருகே ஒரு சிறிய டிரக் கட்டுப்பாடில்லாமல் சறுக்கி சோலாங் பள்ளத்தாக்கில் கவிழும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இரவில் பனி மூடிய சாலையில் டிரக் சரியத் தொடங்கியதும், ஓட்டுநர் வாகனத்திலிருந்து வெளியே குதித்துள்ளார். இதையடுத்து, கீழே சரியும் தனது டிரக்கை கையால் நிறுத்த முயற்சித்த போதும் டிரக் சறுக்கி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.