தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ராகுல் என்ற மாணவர், தனது நண்பர் மனோகருடன், பைக்கில் சென்றுகொண்டிருந்தார். எதிரே சென்ற லாரியை முந்திசென்று வளைவில் திரும்ப முயன்றபோது பின்னால் வந்த லாரி மோதியது. இதில், மனோகருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்திருந்த ராகுலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.