பாஜக - பாமக கூட்டணி தற்போதைக்கு இறுதியாக வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ராமதாஸ், அன்புமணி இருவரும் சென்னையில் முகாமிட்டுள்ளனர். எனவே மதுரை வந்துள்ள அமித்ஷாவை அவர்கள் சந்திக்க வாய்ப்பில்லை எனப்படுகிறது. தந்தை - மகன் மோதல் நீடித்து வரும் நிலையில் யாருடன் கூட்டணி பேசுவது என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ‘அமித்ஷா வருகைக்கு முன் கூட்டணியை உறுதி செய்ய முடிவு’ என வெளியான செய்திகளில் உண்மை இல்லை எனவும் குறப்படுகிறது.