அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். "தொகுதி நிதியை முறையாக செலவு செய்யவில்லை" என்ற இபிஎஸ் பேச்சுக்கு எதிராக இந்த வழக்கைத் தொடர்ந்தார். அதன் மீதான விசாரணை இன்று (மார்ச் 14) நடைபெற்றது. அதில், இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளிதழ் செய்தி, அரசு இணையதள தகவல்களை பார்த்தே பேசியதாக இபிஎஸ் தரப்பு தெரிவித்த நிலையில், தயாநிதி மாறன் ஏப்ரல் 4ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.