சிறுநீரக கற்களுக்கு பெண் ஒருவர் வெண்ணெய் கொண்டு சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் பாலசமுத்திரம் மண்டலம் அமுதாலா கிராமத்தில் ஒரு பெண் இந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார். இதன் விளைவாக, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் தொடர்ந்து அவரிடம் வருகிறார்கள். ஆனால் இது அனைத்தும் வதந்தி என்று யூடியூபர் ஒருவர் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.