மதுரை நரிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில், ஜெபராஜ் (23), சுரேந்தர் (23), கணேஷ்ராஜா (23), ஜான் (23) ஆகிய நான்கு பேரும் சிக்கன் ரைஸ், நூடுல்ஸ், மயோனைஸ் மூலம் தயாரிக்கப்பட்ட ஷவர்மா போன்றவற்றை சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இளைஞர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.