ரயில் விபத்து.. செயலிகளை உருவாக்க முயற்சி

83பார்த்தது
ரயில் விபத்து.. செயலிகளை உருவாக்க முயற்சி
கடந்த ஆண்டு ஆந்திராவில் 14 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த ரயில் விபத்துக்கு லோகோ பைலட்டுகள் மொபைல் போனில் கிரிக்கெட் போட்டியை பார்த்ததே காரணம் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், புதிய ரயில்வே செயலிகள் குறித்து பேசியுள்ள அமைச்சர், பணியின் போது லோகோ பைலட்டுகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் செயலிகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதுகாப்பை மையமாகக் கொண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்துக்கான அடிப்படைக் காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து, அதனை முழுமையாகத் தீர்த்து, அது மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி