கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம், யாரகுன்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஹனுமந்த் (45). இன்று (ஜூலை 6) மொஹரம் பண்டிகையை முன்னிட்டு கொண்டாட்டத்துக்காக தீக்குழி அமைக்கும் பணிகளும் நடந்து வந்தன. அப்போது, ஹனுமந்த் தீயில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஹனுமந்த் சிகிச்சை பலனின்றி சில நிமிடங்களில் உயிரிழந்தார்.