தெலங்கானா: ஹனிமூனுக்கு சென்ற புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுமண தம்பதிகளான சாய் (28) - மாதுரி (23) ஹனிமூனுக்காக கோவாவிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில், சாய் செகாந்திராபாத் ரயில் நிலையத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டு ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது, தவறி தண்டவாளத்திற்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்து உயிரிழந்துள்ளார். இதில் சோகம் என்னவென்றால், சாய் உயிரிழந்தது தெரியாமலேயே அவரின் மனைவி மற்றும் நண்பர்கள் கசேகுடா வரை பயணித்துள்ளனர்.