ஆலைகள் மூடுவதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மூடப்பட்ட பல்வேறு ஆலைகளை திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று (மே.21) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலை இழந்த தொழிலாளர்கள், ஸ்டெர்லைட் ஆலை கிராம மக்கள், தூத்துக்குடி கடலோர பகுதி வாழ் மீனவ மக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.