காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியாக திகழ்ந்த ஸ்ரீ சந்திர சேகேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளின் 31-வது முக்தி தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இவரை பக்தர்கள் 'மகா பெரியவா' என அழைப்பது வழக்கம். இதனையொட்டி ஆராதனை, மகோத்சவம், சதுர்வேத பாராயணம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. அதிஷ்டானத்தில் மகா பெரியவா சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்னதானமும் நடைபெற இருக்கிறது.