மேஷம்: புண்ணியத் திருத்தலங்களுக்கு யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும், மன அமைதியும் ஏற்படும். நண்பர்கள், உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் பெறுவதற்கான வழிமுறைகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். வீட்டில் உள்ள பெண்கள் தங்கள் செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்க வேண்டும்.
ரிஷபம்: திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். இரவு பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் வீட்டில் அமைதியான சூழல் நிலவும். பெற்றோரின் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். எதிர்கால தொழில் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு முதலீடுகளை தொடங்குங்கள்.
மிதுனம்: இன்று வீட்டில் மகிழ்ச்சி பொங்க நல்ல மங்கல காரியங்கள் ஈடேறும். மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள், வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் அமையும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் தாமதமின்றி கிடைக்கும். அலுவலகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
கடகம்: வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அதிகாரிகள் கெடுபிடி காரணமாக மன உளைச்சல் ஏற்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வரும். சிலருக்குப் பயணங்களில் எதிர்பாராத பிரச்னைகள் ஏற்படலாம் கவனமுடன் இருங்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெற்றோரிகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அதன் மூலம் மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.
சிம்மம்: நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலைகள் மாறி லாபமும் அதிகரிக்கும். வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். திருமணத்திற்கு பெண் பார்ப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
கன்னி: தந்தை வழி உறவினர்களால் பல நன்மைகள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த படி லாபம் கிடைத்தாலும் பல வழிகளிலும் வீண் அலைச்சல்கள் ஏற்படும். புதிய வியாபார யுக்திகள் மூலம் அதிக லாபம் அடைவீர்கள். சிலருக்கு வீடு, மனை வாங்கவும் நல்ல நேரம் அமையும்.
துலாம்: வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து லாபம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பாராத விதத்தில் பணியில் இட மாற்றங்கள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதீர்கள்.
விருச்சிகம்: தொழிலில் திடீர் பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றி கிடைக்கும். தொழில் முறை சம்மந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்பாக, வெற்றிகரமாக நடக்கும். புதிதாக
வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
தனுசு: நீண்ட நாட்களாக இருந்த வந்த கடன் பிரச்னைகள் நீங்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பெற்றோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.
மகரம்: பண தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். கணவன் - மனைவி இடையே இருந்த வந்த பிரச்னைகள் நீங்கி தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புண்ணிலதலங்களுக்கு சென்று வரும் நேரம் அமையும். புதிய தொழில் தொடங்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம்: திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அலுவலக ரீதியாக அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க அனுசரித்துச் செல்லுங்கள். சுபகாரிய நிகழ்ச்சிகள் மூலம் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.
மீனம்: பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்படலாம். மற்றவர்களுடன் பேசும் போது கவனமாக பேசுங்கள். சிலருக்குத் தோல் தொடர்பான உபாதைகள் ஏற்படலாம். சம்பாதித்த பணத்தை புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் சேமிக்க முற்படுவீர்கள். பெண்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும் சூழல் உண்டாகும்.