இன்றைய ராசிபலன் 30-06-2023

110631பார்த்தது
மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் இன்று எல்லாவற்றிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், இன்று உங்கள் குழந்தைகளின் உடல்நிலை மோசமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால், உங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளவும். ரிஷபம்: இந்த ராசிக்காரர்கள் இன்று உங்கள் திறமைகளை சிறந்த முறையில் பயன்படுத்தினால் முன்னேற்றம் ஏற்படும். இன்று நீங்கள் வருத்ததுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். இன்று பணிச்சுமை அதிகமாக இருப்பதால் திட்டமிட்டு செயல்படுங்கள். மிதுனம்: இந்த ராசிக்காரர்கள் இன்று கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உடல் உபாதையால் அவதிப்பட நேரலாம். உணவில் கவனம் செலுத்துங்கள். அதிக நீரைப் பருகவும். கடகம்: எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். தொழிலில் உயர்வு இருக்கும். நிலம் சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தந்தையின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். தேவையில்லாத விஷயங்களைப் பற்றிய கவலைகள். பிரிந்த தம்பதியர் மீண்டும் இணைவார்கள். சிம்மம்: இந்த ராசிக்காரர்கள் இன்று சிறந்த முறையில் திட்டமிட்டால் இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. இன்று நிதி வளர்ச்சி குறைந்து காணப்படுவதால் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மேலும், உங்கள் வாழ்கையில் சில ஏமாற்றங்கள் காணப்படும். அது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் விருப்பங்கள் நிறைவேற நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். யாரையும் நம்ப வேண்டாம். துலாம்: இந்த ராசிக்காரர்கள் இன்று ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் நற்பலன்களை அடையலாம். பிரார்த்தனை மற்றும் இறை வழிபாடு இன்று சிறந்தது. உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. எனவே உங்கள் பணிகளை கவனமாக ஆற்ற வேண்டும். விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் பண வரவு ஏற்பட வாய்ப்புள்ளது. தனுசு: இந்த ராசிக்காரர்கள் இன்று பல சிரமத்தை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படும். நீங்கள் முயற்சி எடுத்தால் இன்றைய நாள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற எண்ணங்கள்ளால் தலைவலி ஏற்படும். மகரம்: இந்த ராசிக்காரர்கள் இன்று முடிவு எடுப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து எடுங்கள். பேசுவதில் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளால் கவலை ஏற்படும். கவனமாக செலவு செய்யுங்கள். கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு மனதில் ஏற்படும் குழப்பம் காரணமாக பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். இதனால், இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். உங்கள் மனதில் நேர்மை எண்ணங்கள் காணப்படுவதன் மூலம் நன்மைகள் ஏற்படும். பூர்வீகச் சொத்து வகையில் எதிர்பாராத பணவரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி