மேஷம்: இன்று தேவையில்லாமல் அதிக பணத்தை செலவு செய்வீர்கள், பணம் விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள். முடிந்தவரை கோபத்தை கட்டுப்படுத்துங்கள். திருமணம் ஆனவர்களுக்கு வீட்டில் மனைவியுடன் சண்டை ஏற்படும், மனைவியின் உடல் நலக்குறைவால் இன்று உங்களின் சில வேலைகள் தடைபடலாம்.
ரிஷபம்: இன்று தேவையில்லாமல் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். உங்களின் காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். இருப்பினும், அலுவலகத்தில்
வேலை பார்ப்பவர்களுக்கு சில பணிகள் தடைபடலாம். உங்களின் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களின் குறைகளை பெரிதுபடுத்தாதீர்கள்.
மிதுனம்: இந்த ராசிக்காரர்கள் பால் தொழிலில் ஈடுபட்டிருந்தால் இன்று பொருளாதார ரீதியாக ஆதாயமடைவீர்கள். உங்களின் அன்புக்குரியவர்களால் உங்களின் மன அமைதி பாதிக்கப்படும். குடிப்பழக்கம் உள்ளவர்கள் மரு அருந்துவதை தவிர்த்து ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
கடகம்: உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பணியிட மாற்றத்தால் ஆதாயம் அடைவீர்கள். இன்று உங்கள் நண்பர்கள் சிலர் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களுடன் நேரத்தை செலவிடுவார்கள். திருமணம் ஆனவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரு நாளாக இன்றைய நாள் அமையும்.
சிம்மம்: இந்த ராசிக்காரர்கள் உங்களின் உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். குறிப்பாக தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபடுங்கள். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை மன அழுத்தத்தையும், கவலையையும் உண்டாக்கும். இன்று உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உங்களுக்கு
வேலை கிடைப்பதில் நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்னைகளும் நீங்கும்.
கன்னி: இந்த ராசிக்காரர்கள் பணம் தொடர்பான பிரச்னைகளில் உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக மேற்கொள்ளும் திடீர் பயணம் சாதகமான பலனைத் தரும். முக்கியமானவர்களுடன் பழகும் போது கவனமாக பேசுங்கள்.
துலாம்: நீண்ட நாட்களாக வரவேண்டிய கடன் பாக்கி இன்று உங்களுக்கு வந்து சேரும். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்ளுக்கு நஷ்டம் ஏற்படலாம், இதனால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். அலுவலகத்தில்
வேலை பார்ப்பவர்கள் தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள்.
விருச்சிகம்: உங்களின் நண்பர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். காதலர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு நாளாக இன்றைய நாள் அமையும். தேவையில்லாமல் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். வீட்டில் பெற்றோரிடம் சண்டை போடுவீர்கள். பணம் தொடர்பாக உங்களுக்கு இருந்த வந்த பல பிரச்னைகள் முடிவுக்கு வரும்.
தனுசு: இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். மகிழ்ச்சியான மனநிலை உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் சகோதரன் அல்லது சகோதரி உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். கிடைக்கும் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்துவீர்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் உங்களுக்கு இன்று மகிழ்ச்சியை கொடுக்கும்.
மகரம்: நீண்ட நாட்களாக நிதி நெருக்கடியில் உள்ளவர்களுக்கு வேண்டிய இடத்தில் இருந்து பணம் கிடைக்கும், இதன் மூலம் உங்களுக்கு இருந்து வந்த பல பிரச்னைகள் உடனடியாக நீங்கும். உங்களுக்கு கிடைக்கும் நேரத்தை குடும்ப உறுப்பினர்களிடம் செலவிடுங்கள். காதலர்களுக்கு சில பிரச்னைகள் ஏற்படலாம். சனீஸ்வரர் கோயிலுக்கு சென்று வருவதன் மூலம் சங்கடங்கள் நீங்கும்.
கும்பம்: குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உங்களின் அன்புக்குரியவர்களால் உங்களின் நிம்மதி பாதிக்கப்படும், மேலும் மன அழுத்தத்தையும் உண்டாக்கும். நீங்கள் செய்ய விரும்பாத விஷயங்களைச் செய்ய மற்றவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம். இந்த ராசிக்காரர்களுக்கு உங்கள் ஆசைகளை நிறைவேற்ற இன்று அதிக நேரம் கிடைக்கும்.
மீனம்: மற்றவர்களை விமர்சனம் செய்வதற்கு முன் அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்களை சுற்றியுள்ளவர்களால் உங்களின் நிம்மதி பாதிக்கப்படும், இருப்பினும் வீட்டில் பெற்றோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். திருமணம் ஆனவர்களுக்கு சிறப்பான ஒரு நாளாக இன்றைய நாள் அமையும்.