இன்றைய ராசிபலன் 28-05-2023

109450பார்த்தது
மேஷம்: இந்த ராசிக்காரர்கள் இன்று பணத்தை செலவிடுவதில் சற்று கவனமாக இருங்கள், பணம் குறித்த முக்கியத்துவத்தை நீங்கள் உணர வேண்டும். திருமணமானவர்களுக்கு இல்லற வாழ்க்கையில் சில பிரச்னைகள் எழலாம். உங்கள் மனைவியின் உடல்நலக் குறைவால் இன்று உங்களின் சில வேலைகள் தடைபடலாம். ரிஷபம்: உங்கள் மனதில் தேவையற்ற எண்ணங்கள் எழலாம், இருப்பினும் உங்களின் காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். துணைவியால் வீட்டில் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம். நண்பர்களுக்கு உதவுவதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். பணத்தை செலவிடுவதில் கவனமாக இருங்கள். மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க இன்று நல்ல நாளாகும். உங்களின் கோவம் பிறருக்கு மன கசப்பை கொடுக்கலாம், அதனால் முடிந்தவரை கோவத்தை கட்டுப்படுத்துங்கள். யாருடனும் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கடகம்: தேவையற்ற ஆடம்பர செலவுகளை செய்யாதீர்கள். உங்களின் ஓய்வு நேரத்தை மனதிற்கு பிடித்த விஷயங்களுக்காக மட்டும் செலவிடுங்கள். கோயில்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் சென்று வரவேண்டிய சூழல் உருவாகும். கோயில்களுக்கு செல்வதன் மூலம் மனதிற்கு அமைதி கிட்டும். திருமணம் ஆனவர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு நாளாக அமையும். சிம்மம்: வெற்றிகரமான ஒரு நாளாக இன்றைய நாள் அமையும். இந்த மகிழ்ச்சியை உங்களின் நண்பர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவீர்கள். பணத்தேவை உள்ளவர்களுக்கு வேண்டிய இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். இதனால் உங்களின் வாழ்க்கையில் நீடித்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரலாம். உங்களின் அன்புக்குரியவர்களிடம் கோவமாக பேசுவதை தவிர்க்க வேண்டும், இல்லையென்றால் வீட்டில் சில சண்டைகள் உருவாகும். கன்னி: இன்று உங்களின் காதல் வாழ்க்கையில் சில பிரச்னைகள் வரலாம். திருமணம் ஆனவர்களுக்கு வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நிதி நெருக்கடியில் உள்ளவர்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். நீண்ட காலமாக இருந்து வந்த சில பிரச்னைகள் சுமூகமாக முடியும். தேவையில்லாமல் மற்றவர்களின் குறைகளை விமர்சிக்காதீர்கள். துலாம்: இன்று உங்களுக்கு உடலில் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, அதனால் சற்று கவனமாக இருங்கள். உங்களின் ஆரோக்கியத்துக்கு என்று நேரத்தை செலவிடுங்கள். பணத்தை அதிகமாக செலவு செய்யாமல் இருப்பது நல்லது. வீட்டில் மகிழ்ச்சியான சூழல் அமையும், அக்கம்பக்கத்து வீட்டாரிடம் தேவையில்லாமல் சண்டை போடுவதை தவிர்த்துவிடுங்கள். விருச்சிகம்: தேவையில்லாமல் அடுத்தவரை விமர்சனம் செய்வதற்கு முன் அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள். உங்களின் பணத் தேவைகள் இன்று பூர்த்தியாகும், இதன்மூலம் நீண்ட காலமாக உங்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். வெளியே செல்பவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் சற்று கவனமாக இருங்கள். தனுசு: உங்களின் குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். எந்த நேரத்திலும் பணம் தேவைப்படலாம், எனவே உங்களின் பணத்தை திட்டமிட்டு முடிந்தவரை சேமிக்கத் தொடங்குங்கள். திருமணம் ஆனவர்களுக்கு வீட்டில் சில சண்டைகளால் மன கசப்பு ஏற்படும். உங்களின் வீடுகளுக்கு தொலைதூர இடத்தில் இருந்து உறவினர் வர வாய்ப்பு உள்ளது. மகரம்: இன்று உங்களின் பொருளாதார சிக்கல்கள் தீரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வேலைதேடுபவர்களுக்கு நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் போகலாம், எனவே உங்களின் முயற்சியை மேலும் அதிகப்படுத்துங்கள். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடலாம். கும்பம்: இன்று உங்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான நாளாக அமையும். காதலர்களுக்கு இனிமையான ஒரு நாளாக இன்றைய நாள் இருக்கக்கூடும். முதலீடு தொடங்க, பொருள் வாங்க, விற்க இன்று நல்ல நாள் ஆகும். ஷாப்பிங் செல்லும் போது தேவையற்ற செலவுகளை தவிர்த்துவிடுங்கள். மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரு நாளாக இன்றைய நாள் உங்களுக்கு அமையும். மீனம்: உடல் ஆரோக்கியமாக இருக்க உங்கள் உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சியில் நீங்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இன்று நீங்கள் உங்களின் நாள்பட்ட நோய்களால் அவதிப்படுவீர்கள், எனவே மருத்துவமனைக்குச் சென்று நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும், அதனால் சற்று கவனமாக இருங்கள். பல முரண்பாடுகள் இருந்தாலும், உங்கள் காதல் வாழ்க்கை இன்று சிறப்பாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி