இன்றைய ராசிபலன் 27-06-2023

100654பார்த்தது
மேஷம்: இன்று நீங்கள் எதிலும் பொறுமையுடன் சிந்தித்து செயல்பட வேண்டும். தந்தைவழி உறவினர்களால் திடீர் செலவு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. புதிய முயற்சிகள் எடுக்கும் போது கவனமாக எடுங்கள். வீட்டில் உங்கள் துணையை புரிந்துகொள்வதில் சில சிரமங்கள் ஏற்படும். ரிஷபம்: இன்று உங்களுக்கு பணவரவு எதிர்பார்த்த வகையில் இருக்கும். வியாபாரத்தில் புதிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமையாக செயல்படுங்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகளின் காரணமாக சோர்வு ஏற்படும். சுபகாரியங்கள் காரணமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். மிதுனம்: வீட்டில் குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை பாதிக்கப்படும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே சண்டைகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைந்து காணப்படும். அரசாங்க காரியங்கள் முடிவதில் இழுபறி நீடிக்கும். கடகம்: நீங்கள் அடிக்கடி கவனத்தை இழந்து நேரத்தை வீணடிப்பதால் உங்கள் மனதைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். தேவையற்ற கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும். தந்தைவழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்படும். வீட்டில் நடைபெறும் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். சிம்மம்: திருமண வயதில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபடும்போது அனைத்தும் சுமூகமாக முடியும். குடும்ப தலைவர்கள் செலவுகளைக் குறைத்து சிக்கனமாக இருந்தால் பணம் தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். மாணவர்கள் கல்வியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். கன்னி: வீட்டில் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புதிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். திடீர் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். உடன் பிறந்தவர்களின் சில செயல்கள் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். துலாம்: கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளை முடிப்பதில் சில தடங்கல் ஏற்படும், இதனால் உயர் அதிகாரிகளுடன் சண்டை ஏற்படும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் ஏதேனும் இருந்தால் சிவபெருமான் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள். விருச்சிகம்: குடும்ப தலைவிகள் வீட்டில் உள்ள குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் அலட்சியம் வேண்டாம். சிறு தவறும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்திவிடும் என்பதால் மிகுந்த கவனமாக இருக்கவும். தனுசு: பொருளாதார நிலையை பொறுத்தவரை நன்றாக இருக்கும். சிலருக்கு ஏற்படும் திடீர் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். வியாபாரம் எதுவானாலும் புதிய திட்டங்கள் தீட்டுவதன் மூலமாக அதிக லாபங்களை அடைவீர்கள். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளின் கெடுபிடிகளும் அதிகமாகும். வெளியூர் பயணங்களை தள்ளிப்போடுவது நல்லது. மகரம்: திருமண முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னர் சாதகமாக முடியும். மனைவியின் ஆலோசனைகளை கேட்டு நடந்தால் வீட்டில் இன்பம் பொங்குவதோடு, முன்னேற்றங்களும் தேடிவரும். அரசு வேலைகான முயற்சியில் இருப்பவர்களுக்குப் போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மன அமைதி தேவைப்பட்டால் திருவண்ணாமலைக்கு சென்று வழிபட்டு வாருங்கள். கும்பம்: வீட்டில் பிள்ளைகளால் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். உடன்பிறந்தவர்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழ்நிலை அமையும். அரசாங்க வகையில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்ப வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும். சிலருக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் மூலமாக நன்மைகள் ஏற்படும். மீனம்: பண வரவு மிகவும் திருப்திகரமகா இருக்கும். உங்கள் குடும்பத்திற்கு நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு இருந்தால் பொறுமையாக செயல்படுங்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். உடல்நிலையில் அதிகம் கவனம் செலுத்துங்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய கடின உழைப்பு தேவைப்படும். பங்குச்சந்தை முதலீடு இருந்தால் கவனமாக முதலீடு செய்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம்.

தொடர்புடைய செய்தி