மேஷம்: உங்கள் மனதில் இன்று தேவையற்ற எண்ணங்கள் எழலாம், அதனால் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள கூடிய பயிற்சிகளில் ஈடுபடுங்கள். பணம் தொடர்பான வழக்கில் நீங்கள் ஈடுபட்டிருந்தால், நீதிமன்றம் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்றைய தினத்தில் பொறுமையை கடைபிடியுங்கள்.
ரிஷபம்: இன்று நீங்கள் நிம்மதியாகவும், நல்ல மனநிலையிலும் இருப்பீர்கள். பணத்தை சேமித்து, அதனை புத்திசாலித்தனமாக செலவழிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் பின்னர் பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். தொழில் ரீதியாக மேற்கொண்ட பயணங்கள் நல்ல பலனளிக்கும்.
மிதுனம்: எதிர்காலத்தில் நீங்கள் நிதி ரீதியாக வலுவாக இருக்க விரும்பினால், பணத்தை சேமிக்கத் தொடங்க வேண்டும். உங்கள் துணையின் ஆதரவும், அவர்களின் உதவியும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களின் அன்புக்குரியவர்களுக்காக நேரத்தை செலவிடுங்கள். மாலையில் தொலைதூர இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகளை எதிர்பார்க்கலாம்.
கடகம்: உங்கள் எண்ணங்கள் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று மன அமைதியுடன் காணப்படுவீர்கள். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும் சூழல் அமையும். இருப்பினும் தேவையற்ற காரணங்களுக்காக கவலைப்படுவீர்கள்.
சிம்மம்: உங்களுக்கு இருந்த பணம் தொடர்பான பிரச்னைகள் நீங்கும், ஆனால் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். செய்யவேண்டிய காரியங்களை சரியான நேரத்தில் செய்து முடித்துவிடுங்கள் இதன் மூலம் தேவையற்ற சிரமங்களை தவிர்க்கலாம். வாழ்க்கையில் சில நாட்களாக இருந்த வந்த பிரச்னைகள் நீங்கி இன்று மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.
கன்னி: இன்று நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். ஆபத்தான நேரங்களில் நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். உங்கள் அன்புக்குரியவர்கள் கொஞ்சம் வருத்தமாக இருப்பார்கள், இதனால் உங்களின் மன அழுத்தம் அதிகரிக்கும். நேரம் கிடைக்கும் போது உங்கள் வீட்டில் உள்ள வேலைகளில் ஈடுபடுங்கள், இதன் மூலம் தேவையற்ற மனக்குழப்பங்கள் நீங்கும்.
துலாம்: உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள். திட்டமிட்டு செலவிடுங்கள், இதன் மூலம் தேவையற்ற செலவுகளை தவிர்க்கலாம். இரவு நேர பணங்களை தவிர்ப்பது நல்லது. பணம், கொடுக்கல் வாங்கல் போன்ற பிரச்னைகளில் தலையிடாதீர்கள். சில பழைய மற்றும் தீர்க்கப்படாத பிரச்னையால் மீண்டும் ஒரு புதிய பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது அதனால் கவனமாக இருங்கள்.
விருச்சிகம்: இன்று உங்களின் துணைக்கு தேவையான நேரத்தை செலவிடுங்கள், இதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். கிடைக்கும் ஓய்வு நேரங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். கடந்தகால நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனமாக இருங்கள்.
தனுசு: உங்கள் ஓய்வு நேரத்தை பொழுதுபோக்கு அல்லது நீங்கள் மிகவும் விரும்பும் விஷயங்களைச் செய்ய செலவிடுங்கள். வீட்டில் நடைபெறும் சுபகாரியங்களால் மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும். வீட்டில் பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள், காதலர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு நாளாக இன்றைய நாள் அமையும். பேசும் போது அனைவரிடமும் கவனமாக பேசுங்கள்.
மகரம்: உங்கள் எண்ணங்கள் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். நீண்டகாலமாக நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த சில காரியங்கள் இன்று முடியாமல் போக வாய்ப்பு உள்ளது. மேலும், குடும்ப உறுப்பினர்களால் மன அமைதி பாதிக்கும். உங்கள் துணை உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
கும்பம்: உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நேரத்தை செலவிடுங்கள். பணத்தை சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நாள் உங்களுக்கு ஒரு சிறப்பான நாளாக அமையும். கணவன் - மனைவி உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்க சூழல் அமையும். வெளியில் சாப்பிடுவது வயிற்றைக் கெடுத்து, செரிமானத்தை பாதிக்கும். எனவே, இன்று வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மீனம்: சொத்து பிரச்னைகள் இருந்தால் அதன் தீர்ப்பு இன்று உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களின் மகிழ்ச்சி உங்களை சுற்றியுள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். அக்கம்பக்கத்து வீட்டாரால் உங்கள் இல்லற வாழ்க்கையில் பிரச்னைகள் எழலாம், அதனால் கவனமுடன் இருங்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறிய சிறிய சண்டைகளால் உங்களின் மன அமைதி பாதிக்கப்படும்.