மேஷம்: இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். பண வரவு திருப்திகரமாக அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தாயாரின் உடல் நலனில் அதிக கவனம் செலுத்துங்கள். அலுவலக ரீதியாக வெளியூர் பயணத்தின் போது கவனமாக இருங்கள்.
ரிஷபம்: இன்று உங்களுக்கு சில எதிர்பாராத செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். வீட்டில் பிள்ளைகள் வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்: இன்று உங்கள் ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்த உங்களுக்கு தேவையானதைச் செய்ய போதுமான நேரம் கிடைக்கும். நீங்கள் நீண்ட நாளாக காத்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படும். பள்ளி செல்லும் மாணவர்கள் கல்வியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
கடகம்: இன்று நீங்கள் பணம் தொடர்பான பிரச்னைகளை சந்திக்க நேரிடும். கலை மற்றும் நாடகத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்த பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று, அலுவலகத்தில் உங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும்.
சிம்மம்: புகைபிடிப்பதை நிறுத்துவது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் குடும்ப உறுப்பினர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். திருமணம் ஆனவர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு நாளாக இன்றைய நாள் அமையும். புதிய நண்பர்களின் சந்திப்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும் என்றாலும் அதனால் செலவுகளும் அதிகரிக்கும்.
கன்னி: மன அழுத்தத்திலிருந்து விடுபட உங்கள் பொன்னான நேரத்தை உங்கள் குழந்தைகளுடன் செலவிடுங்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த இடத்தில் இருந்து பணம் வரலாம். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படலாம். சிலருக்கு திடீர் பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலை அமையும் அதனால் ஆதாயம் கூட ஏற்படும்.
துலாம்: தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில பிரச்னைகள் ஏற்படும். அரசு வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். சில எதிர்பாராத பயணங்களும் அதனால் உடல் அசதியும் உண்டாகும். உடல் நலத்தில் கவனமாக இருங்கள்.
விருச்சிகம்: வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களால் மன அழுத்தம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மிக அதிக கவனம் செலுத்துங்கள். வேறு வேலைக்கு மாற இப்போது எந்த வித முயற்சியும் எடுக்க வேண்டாம். பிரச்னைகள் ஏதும் இருந்தால் கோயிலுக்கு சென்று தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள் மன அமைதி கிடைக்கும்.
தனுசு: உங்களுக்கு அதிகமான மன உறுதி இருப்பதால் அனைத்து பிரச்னைகளையும் சமாளிக்க முடியும். வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு நல்ல
வேலை கிடைக்கும். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாக குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும் போது கவனமுடன் பேசுங்கள். கணவன் - மனைவி இடையே இருந்த சண்டைகள் முடிவுக்கு வரும்.
மகரம்: இன்று பணம் தொடர்பாக உங்களுக்கு சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். புதிய முடிவுகளை எடுக்கும் முன் வீட்டில் ஆலோசித்து விட்டு எடுங்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலக சூழ்நிலை திருப்தி தருவதாக அமையும். நீண்ட நாளாக திருமண தடை இருந்தால் சிவபெருமான் கோயிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் நல்லது நடக்கும்.
கும்பம்: இன்று உங்களுக்கு வியாபாரத்தில் மிகவும் லாபகரமாக இருக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். காதலிப்பவர்கள் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கலாம் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். கடன் வாங்கி முதலீடு செய்வதை தவிர்த்து விடுங்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்துங்கள் இல்லையெனில் தேவையில்லாத சங்கடங்கள் ஏற்படும்.
மீனம்: இன்று நாள் முழுவதும் உங்களுக்கு பணம் தொடர்பான பிரச்னைகள் இருந்தாலும், மாலையில் அனைத்தும் முடிவுக்கு வரும். சிலருக்கு அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்களால் பிரச்னை ஏற்படும். கணவன் - மனைவி இடையே இருந்த சங்கடங்கள் முடிவுக்கு வந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணத்திற்காக பெண் பார்ப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.