மேஷம்: மேஷ ராசியினருக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். இன்று நீங்கள் சில பெரிய வேலைகளை மேற்கொள்வீர்கள் அதில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கை துணையின் நல்ல ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் நண்பர்களின் எண்ணிக்கையும் கூடும். இன்று நீங்கள் பணியிடத்தில் நிதி ஆதாயம் பெறுவீர்கள். அதிகாரிகளின் ஊக்கமும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
ரிஷபம்: நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த உங்களின் பணிகள் இன்று முடிவடையும். இன்று சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். உங்கள் நடத்தை மற்றும் அமைதியின் மூலம் நீங்கள் சூழ்நிலையை சாதகமாக வைத்திருக்க முடியும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். இன்று வியாபாரத்தில் உங்கள் முடிவுகளுக்கு பலன் கிடைக்கும். செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்: இன்று மிதுன ராசிக்காரர்கள் நினைத்த காரியங்களை முடித்து திருப்தி அடைவார்கள். பிள்ளைகள் தரப்பிலிருந்து ஏதாவது டென்ஷன் நடந்தால் அதுவும் இன்றே தீரும். இன்று நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் மிகவும் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். இன்று உங்கள் தாயாருடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எனவே முடிந்தவரை சூழ்நிலையை சமாளித்து உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தவும்.
கடகம்: இன்று, கடக ராசிக்காரர்கள் தங்கள் தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். இன்று நீங்கள் நிதி விஷயங்களில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று குழந்தை மூலம் சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் இன்று போட்டிகளில் உற்சாகமான பலன்களைப் பெறலாம். உங்கள் குழந்தைகளுடன் உங்கள் பந்தம் நன்றாக இருக்கும். மேலும் அவர்களிடமிருந்து அன்பையும் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். இன்று, நீங்கள் வணிகத்திற்காக வெகுதூரம் அல்லது அருகில் பயணம் செய்ய வேண்டியிருந்தால், கண்டிப்பாக அதைச் செய்யுங்கள். ஏனென்றால் அது உங்களுக்கு நிச்சயமாக நன்மை பயக்கும்.
கன்னி: இன்று, கன்னி ராசியினர் மத நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்பார்கள்.
அரசியல் சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்று நல்ல வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் வியாபாரத்திற்காக நீங்கள் ஒரு முடிவை எடுத்தால், நிறைய யோசித்து யாருடைய வார்த்தைகளுக்கும் மயங்காதீர்கள். இல்லையெனில் உங்கள்
வேலை பாழாகிவிடும். தடைபட்டிருந்த முக்கிய பணிகள் இன்று நிறைவேறும்.
துலாம்: துலாம் ராசியினருக்கு இன்று நிதி விஷயங்களில் தீர்வுகள் கிடைக்கும். தேவையற்ற செலவுகள் மற்றும் திடீர் செலவுகள் வரலாம். அனைத்தும் நன்மைக்கே என்று கடப்பது பலன் அளிக்கும். உங்கள் வார்த்தைகளில் நீங்கள் நிதானமாக இருக்க வேண்டும். திட்டமிட்ட பணிகளை முடித்து, பணியிடத்தில் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்: இன்று உங்கள் பிள்ளைகள் சிறப்பாகச் செயல்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். சொத்து சம்பந்தமான தகராறு ஏதேனும் இருந்தால், இன்று அதில் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த சிலர் தங்களால் இயன்றவரை முயற்சி செய்வார்கள். ஆனால் நீங்கள் அவர்களை தவிர்க்க வேண்டும். இன்று எதிர்கால திட்டங்களை குடும்பத்தினருடன் விவாதிப்பீர்கள்.
தனுசு: இன்று உங்களுக்கு தர்ம எண்ணம் அதிகரிக்கும். இன்று மத சடங்குகளில் கலந்து கொள்வீர்கள். உங்கள் பேச்சின் இனிமையைக் கடைப்பிடிக்க வேண்டும். இன்று உங்களுக்கு கிடைக்கும் மரியாதை காரணமாக, ஒரு பெண் நண்பரின் உதவியால்,
பதவி உயர்வு கிடைக்கும். இன்று குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். இதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். மாணவர்களுக்குத் தேர்வுகளில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்க ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அவசியம்.
மகரம்: இன்று உங்கள் அன்றாட வேலைகளில் திடீர் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். இன்று விலையுயர்ந்த பொருட்களைப் பெறுவதோடு சில தேவையற்ற செலவுகளும் வரலாம். இன்று உற்றார் உறவினர்களின் வருகை இருக்கும்.
தொழில் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். அனைத்து குழப்பங்களில் இருந்தும் தெளிவு பிறக்கும். தொலைதூர செய்திகள் மகிழ்ச்சியை தரும்.
கும்பம்: இன்று உங்களின் புத்திசாலித்தனத்தால் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அதன் மூலம் உங்கள் தொழில், வியாபாரம் உயரும். உங்களைச் சுற்றியுள்ள சூழல் இனிமையாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடையே ஏதேனும் சச்சரவு ஏற்பட்டால், அதுவும் பெரியவரின் உதவியால் இன்றே தீரும். சகோதரரின் திருமண காரியம் இன்று முடியும். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.
மீனம்: இன்று நீங்கள் உங்கள் வியாபாரத்தில் திருப்தி அடையவீர்கள். உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இன்று நிதி ரீதியாக நல்ல நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். உங்களை சிலர் சாதகமாக பயன்படுத்தி பொருள் ஈட்டும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருப்பது நல்லது. குழந்தைகளால் சமூகத்தில் மரியாதையும், புகழும் அதிகரிக்கும்.