இன்றைய ராசிபலன் 14-06-2023

60165பார்த்தது
மேஷம்: இன்று உங்களின் வேலையிடத்தில் உயர் அதிகாரிகளின் அழுத்தமும், வீட்டில் சில பிரச்னைகளும் ஏற்படும். இது உங்களின் வேலையில் கவனத்தை பாதிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் சூழல் அமையும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த அளவுக்கு லாபம் இருக்காது. ரிஷபம்: திருமண வயதில் உள்ள பெண் அல்லது பிள்ளைக்கு திருமண முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் அனைத்து காரியங்களும் சுமூகமாக முடியும். கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகள் நீங்கும், வேலைக்கு செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சிலருக்கு ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மிதுனம்: இன்று உங்களுக்கு பொருளாதார நிலை நல்லபடியாக இருக்கும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வீர்கள் அதனால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகலாம். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். கடகம்: உங்களுக்கு கிடைக்க வேண்டிய இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். பெரிய முடிவுகள் எடுக்கும் உன் பெற்றோரிடம் ஆலோசனை நடத்துங்கள், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். சிவபெருமானை வழிபட்டு வந்தால் உங்களுக்கு இருக்கும் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். சிம்மம்: இன்று உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள், வீண்செலவுகளை தவிர்த்துவிடுங்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளுங்கள், உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். கணவன் - மனைவிக்கு இடையே இருந்த பிரச்னைகள் நீங்கும். கன்னி: உடன் பிறந்தவர்களால் பிரச்னைகள் உண்டாகும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும், இதனால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். பணியிடத்தில் அல்லது வியாபாரத்தில் ஏதேனும் அலட்சியம் இருந்தால் உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும். வெளியூர் பயணங்களின்போது கவனமுடன் சென்று வாருங்கள். துலாம்: உங்கள் வாழ்க்கை துணைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படக்கூடும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். உடன் ஆரோக்கியத்தில் மட்டும் அதிகம் கவனம் செலுத்துங்கள், குடும்ப சொத்து தொடர்பாக இருந்த வந்த பிரச்னைகள் நீங்கும். பழனிக்கு சென்று முருகனையும் வழிபட்டு வாருங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். விருச்சிகம்: உங்களுக்கு இன்று உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படலாம். முதியோர்களுக்கு புனித தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் அதிகம் கவனம் செலுத்துங்கள், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வீட்டில் கஷ்டங்கள் ஏதும் இருந்தால் அம்பிகையை வழிபடுங்கள். தனுசு: அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சியும், நிம்மதியும் காணப்படும். கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறு பாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மகரம்: இன்று உங்களுக்கு வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் மூலம் பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு மாற இப்போது முயற்சி செய்ய வேண்டாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை இப்போது தொடங்க வேண்டாம் நேரம் வரும் வரை காத்திருங்கள். கும்பம்: நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி இன்று வந்து சேரும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். வீட்டில் தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். நீண்ட நாளாக நிறைவேற்றாமல் விடுபட்ட குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மீனம்: உங்களுக்கு இன்று எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக முடியும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சில சிக்கல்கள் உண்டாகலாம்.

தொடர்புடைய செய்தி