இன்றைய ராசிபலன் 09-07-2023

85574பார்த்தது
மேஷம்: இன்று உங்களுக்கு மிகவும் சவாலான நாள். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லுங்கள். எதிர்பாராத சில பிரச்னைகளால் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும் போது மிகவும் கவனமாக பேசுங்கள். அரசாங்கக் காரியங்கள் உங்களுக்கு அனுகூலமாக முடியும். ரிஷபம்: வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது நன்றாக சிந்தித்து செயல்படுங்கள். திருமண வயதில் உள்ள பிள்ளைகளுக்கு திருமண தொடர்பான முயற்சிகளை எடுக்கலாம். மிதுனம்: பணியிடத்தில் அதிகாரிகள் மூலம் வேலைப்பளு அதிகரிக்கும். உங்களின் குடும்ப உறுப்பினர்களிடையே மதிப்பு அதிகரிக்கும். பணம் கிடைப்பதில் இழுபறியாக இருந்த தடைகள் நீங்கும். உடன் பிறந்த சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்படும். வியாபாரம் காரணமாக சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். கடகம்: எதிர்காலத்தை நினைத்து மிகவும் கவலைப்படுவீர்கள். தாய் வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். புதிதாக சில முயற்சிகள் எடுக்கும் போது சற்று கவனமாக இருங்கள். பணம் வரவு திருப்திகரமாக இருக்கும். நெருங்கிய நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். சிம்மம்: இன்று மனதில் மிகவும் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்தி வரும். வெளியூரில் இருந்து விருந்தினர்கள் உங்கள் வீட்டிற்கு வரக்கூடும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகளில் ஈடுபட்டால் அனைத்தும் நல்லபடியாக அமையும். கன்னி: இன்று கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். உறவினர்கள் சந்திப்பு மூலம் ஆதாயம் ஏற்படக்கூடும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்பதால் சோர்வு உண்டாகும். துலாம்: காவல்துறையில் பணிபுரிபவர்கள் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது. சிலர் புதிய வீடு, மனை வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். உடன் பிறந்த சகோதரர்கள் மூலம் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். விருச்சிகம்: இன்று உங்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். முக்கியமான காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு உடல் நல பிரச்னைகள் ஏற்படும். தனுசு: பூர்வீக சொத்து தொடர்பாக இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். உறவினர்களுடன் இருந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று செலவுகள் அதிகம் காணப்படும். இழப்பை தவிர்க்க திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். மகரம்: இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். காதலில் ஈடுபட்டுள்ளவர்கள் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கலாம். 60 வயதை கடந்தவர்களுக்கு திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இன்று போதிய பணம் கிடைக்கும். கும்பம்: உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். குடும்ப பிரச்னை காரணமாக உங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். பொறுப்புகள் அதிகமாக இருப்பதால் உங்கள் குடும்பத்திற்காக அதிகம் செலவிடுவீர்கள். சிலருக்கு கண் சம்பந்தமான பிரச்னை, காது வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். மீனம்: இன்று நீங்கள் மிகவும் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். பணியிடச் சூழல் திருப்திகரமாக இருக்காது. உங்கள் துணையிடம் அன்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். திடீர் பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி