இன்றைய ராசிபலன் 09-06-2023

72359பார்த்தது
மேஷம்: காதலில் இருப்பவர்களுக்கு திருமணம் நடைபெறும் சூழல் அமையும். குடும்பத்திலும், பணியிடத்திலும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது, அதனால் பேசும்போது கவனமாக பேசுங்கள். உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும். சிறப்பான ஒரு நாளாக இன்றைய நாள் அமையும். ரிஷபம்: உங்களுக்குத் தெரிந்த சிலரின் மூலம் புதிய வருமானம் கிடைக்கும். உங்களின் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியை தரும். தொலைதூர பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும், இதனால் மன அழுத்தம் உண்டாகும். உடல்நலம் தொடர்பான சில பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மிதுனம்: இன்று கோபத்தையும், உணர்ச்சிவசப்படுவதையும் கட்டுப்படுத்தவும். குடும்ப உறுப்பினர்களுடன் ஏதாவது ஒரு விஷயத்தில் தகராறு ஏற்பட்டு வீட்டில் நிம்மதி இல்லாத நிலை ஏற்படும். உங்கள் உடல் நலன் சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பாக வெளியூர் பயணம் செய்ய வேண்டியிருக்கும். கடகம்: தொழில் வியாபாரம் தொடர்பாக நீங்கள் மேற்கொள்ளும் பயணம் இனிமையாகவும், லாபகரமாகவும் இருக்கும். சொத்து தொடர்பாக இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். உடல்நிலை சீராக இருக்கும். நண்பர்களின் உதவியால் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த சில வேலைகளை முடிக்க முடியும். சிம்மம்: வீட்டுக்கு தேவையான உபயோகப் பொருட்களை வாங்குவதற்கு நல்ல நாளாகும். வீட்டில் பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். தொழில் வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணம் இனிமையாகவும் லாபகரமாகவும் இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். கன்னி: இன்று பொறுமையை கடைபிடியுங்கள். பணம் தொடர்பான பிரச்னைகளில் உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதைச் செய்யுங்கள், ஆனால் மற்றவர்களின் விவகாரங்களிலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். திருமணம் ஆனவர்களுக்கு வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படலாம். துலாம்: திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், தேவையான பண வரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும், மனைவி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். நினைத்த காரியம் நிறைவேற துர்கை அம்மனை வழிபடுங்கள். விருச்சிகம்: உடல் நிலை பாதிக்கப்படும், குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்ற நீண்ட தூர பயணம் மேற்கொள்ள நேரிடும். வீட்டில் உள்ள பெண்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். தனுசு: இன்று நீங்கள் செய்யும் தர்ம காரியங்கள் மன அமைதியையும், நிம்மதியையும் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் ஏற்படும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். செலவுகளை சமாளிப்பதற்கு தேவையான பண வரவு கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபட்டு வருவதன் மூலம் மனதில் தைரியம் உண்டாகும். மகரம்: நீண்ட காலமாக இருந்து வந்த சொத்து பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். குடும்ப விஷயங்களில் கணவன் - மனைவி இருவரும் இணைந்து செயல்படுவது நல்லது. வியாபாரிகள் தொழிலை விரிவுபடுத்த வெளியூர் பயணம் சென்று வரும் சூழல் அமையும். வேலைக்கு சென்று வரும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். கும்பம்: உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரிடமாவது நீங்கள் கடன் வாங்கியிருந்தால், அதை இன்றே திருப்பித் தருவது நல்லது. உங்கள் ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். இன்று உங்களின் அலுவலகத்தில் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உயர் அதிகாரி உங்களிடம் கடுமையாக நடந்துகொள்ளக் கூடும், கவனமுடன் பொறுமையாக இருங்கள். மீனம்: குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்து காணப்படும், தேவையான இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சிலருக்கு பணியிடத்தில் மாற்றம் கூட ஏற்படலாம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி