இன்றைய ராசிபலன் 06-06-2023

45403பார்த்தது
இன்றைய ராசிபலன் 06-06-2023
மேஷம்: அலுவலகத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சக பணியாளர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். வியாபாரிகளுக்கு இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். ரிஷபம்: கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும், உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உறவினர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும், அலுவலகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும். கடன் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி இறைவனை வழிபடுங்கள். மிதுனம்: உடல்நலப் பிரச்னைகள் உங்களைத் தொந்தரவு செய்யும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் சுமூகமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியே வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். கடகம்: உடல் உபாதைகளில் இருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். பால் தொழிலில் தொடர்புடையவர்கள் இன்று பொருளாதார ரீதியாக ஆதாயமடைவார்கள். வீட்டில் பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகள் கண்டிப்பாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சிம்மம்: உங்களுக்கு இன்று பணம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமையுடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த சங்கடங்கள் அனைத்தும் நீங்கும். வெளியூர் பயணம் செய்யும் போது கவனமாக சென்று வாருங்கள். கன்னி: குடும்ப உறுப்பினர்களால் இதுவரை இருந்து வந்த சிறு சிறு பிரச்னைகள் நீங்கி, மகிழ்ச்சியும் உற்சாகமும் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். துலாம்: உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உறுதுணையாக இருப்பார்கள், இதனால் உங்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணம் தொடர்பாக இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். சிலருக்கு வீண்செலவுகள் ஏற்படும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவதன் மூலம் மனதில் இருந்த சங்கடங்கள் அனைத்தும் நீங்கும். விருச்சிகம்: உடல் ஆரோக்கியத்தில் அலட்சியப்படுத்தாமல் கவனமாக இருங்கள். குழந்தைகளின் உடல்நிலையில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சிறப்பு கவனம் செலுத்துங்கள். மற்றவர்களுடன் வாக்குவாதம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்திகரமாக இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற நீண்டதூரப் பயணம் மேற்கொள்ள நேரிடும். தனுசு: இன்று பணம் தொடர்பான விஷயங்களில் உங்கள் துணையுடன் சண்டை வரலாம். இருப்பினும், உங்கள் அமைதியான அணுகுமுறையால், நீங்கள் எல்லாவற்றையும் சரிசெய்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியும் ஆதாயமும் தருவதாக இருக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். அலுவலகத்தில் அதிகாரிகள் கண்டிப்பு காட்டினாலும் பொறுமையாக இருங்கள். மகரம்: புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது மனைவியின் ஆலோசனை கேட்டு செயல்படுங்கள். அலுவலகப் பணியின் காரணமாக சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முருகன் கோயிலுக்கு சென்று வருவதன் மூலம் உங்களுக்கு இருக்கும் பிரச்னைகள் நீங்கும். கும்பம்: நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். வீட்டில் கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிதாக வியாபாரம் தொடங்க விரும்புபவர்களுக்கு நல்ல நேரம் அமையும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். திருமணம் ஆனவர்களுக்கு பிள்ளைகளால் திடீர் செலவுகள் ஏற்படும். மீனம்: இன்று நிதானமாக இருக்க வேண்டிய நாளாகும். நீங்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி அம்பிகையை வழிபடுங்கள்.

தொடர்புடைய செய்தி