இன்றைய ராசிபலன் 02-06-2023

47476பார்த்தது
இன்றைய ராசிபலன் 02-06-2023
மேஷம்: நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கி இருந்தால் அதை திருப்பிச் செலுத்த வேண்டிய சூழல் அமையும். இது உங்கள் நிதி நிலையை பலவீனப்படுத்தும். வயதில் முதியவர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு நாளாக இன்றைய நாள் அமையும், வீட்டில் பேரக்குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். புதனின் நன்மை அதிகரிக்கும், இதனால் உங்கள் காதல் வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கும். ரிஷபம்: இன்று உங்கள் நம்பிக்கையும் உற்சாகமும் அதிகமாக இருக்கும். வீட்டுக்குத் தேவையான சில பொருட்களை வாங்குவீர்கள். குடும்ப பிரச்சனைகளுக்கு உடனடியாக கவனம் செலுத்துங்கள். உங்கள் துணையைப் புரிந்துகொள்வதில் சில சிரமங்களை அனுபவிப்பீர்கள். கிடைக்கும் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்துங்கள். மிதுனம்: உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இதனால் உங்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று, தேவையற்ற சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். இது உங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும். திருமணம் ஆனவர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு நாளாக இன்றைய நாள் அமையும். கடகம்: இன்று பணம் தொடர்பான விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள். தொலைதூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். நண்பர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்களுக்கு சில மனக்கஷ்டங்கள் வரும். இது உங்களுக்கு குழப்பத்தையும் சோர்வையும் ஏற்படுத்தும். மன அமைதிக்கு முருகன் கோயிலுக்கு சென்று வாருங்கள். சிம்மம்: இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான ஒரு நாளாக அமையும். அலுவலகத்திலும், வீட்டிலும் மகிழ்ச்சியான சூழல் அமையும். பணம் தொடர்பாக உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். காதலில் இருப்பவர்களுக்கு திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடிவரும். வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். கன்னி: உங்களின் கோவம் மற்றவர்களுடன் வாக்குவாதம் மற்றும் மோதலில் முடியும், எனவே யாரிடமும் கோவமாக பேசாதீர்கள். நீங்கள் செய்த எந்தவொரு பழைய முதலீடும் லாபகரமான வருமானத்தைத் தரும். ஒரு செம்பு பாத்திரம் அல்லது வீட்டில் தங்கப் பாத்திரம் இருந்தால் அதில் தண்ணீரை நிரப்பி, அதை குடித்து வந்தால் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும். துலாம்: உங்களுக்கு இருக்கும் உடல்நலப் பிரச்சினைகள் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்த ராசிக்காரர்கள் இன்று பூமி தொடர்பான காரியங்களுக்கு பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். நண்பர்கள் மற்றும் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்காக நேரத்தை செலவிடுங்கள், இதன் மூலம் மகிழ்ச்சியான ஒரு நாளாக இன்றைய நாள் அமையும். விருச்சிகம்: அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் சண்டை ஏற்படும். எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அதிகப்படியான வேலை இன்று மன அழுத்தத்தையும் சோர்வையும் தரும். காதலர்களுக்கு இனிமையான ஒரு நாளாக இன்றைய நாள் அமையும். தேவையில்லாத பட்சத்தில் அமைதியாக இருங்கள், ஏனென்றால் நீங்கள் சொல்லும் தேவையில்லாத விஷயங்கள் உங்களை சிக்கலில் மாட்டிவிடும். தனுசு: ஆரோக்கியத்துடன் கூடிய சிறப்பான நாள் இன்று. உங்களின் பொருளாதாரம் மேம்படும். இன்று உங்கள் காதல் வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படலாம். உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்துங்கள். மன அமைதிக்கு தியானம் செய்வது, கோயிலுக்கு சென்று வருவது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள். மகரம்: இன்றைய நாளின் ஆரம்பம் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும். அன்புக்குரியவர்களுக்கு வெறுப்புக்கு பதிலாக, உங்கள் அன்பைக் காட்டுங்கள். ஜாமீன் கையெடுத்து போடுவது, கடன் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். இதனால் உங்களின் நிம்மதி பாதிக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான பேச்சுவார்தை சுமூகமாக முடியும். கும்பம்: இன்று எந்த ஒரு முடிவையும் அவசரமாக எடுக்காதீர்கள். வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கடின உழைப்பு மட்டுமே உங்களுக்கு வெற்றியை தேடித் தரும். பணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருங்கள். பெரிய காரியங்களை செய்யும் முன் வீட்டில் பெற்றோரிடம் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். மீனம்: இந்த ராசியினருக்கு வீட்டில் மனைவியுடன் மகிழ்ச்சியான சூழல் அமையும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படும். செய்ய வேண்டிய காரியங்களை அப்போதே செய்து முடித்து விடுங்கள், நேரத்தை தள்ளிப்போடாதீர்கள். திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்களுக்கு அனைத்தும் கைகூடிவரும். வீடு கட்டுவதில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.

தொடர்புடைய செய்தி