இன்றைய ராசிபலன் 01-07-2023

113459பார்த்தது
மேஷம்: இன்று நீங்கள் எப்போதும் சற்று பொறுமையுடன் இருக்க வேண்டும். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாக கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்டிருந்த சண்டைகள் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. புதிய முயற்சிகள் எதுவும் இப்போது எடுக்க வேண்டாம். ரிஷபம்: இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். இருப்பினும் சில எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணம் காரணமாகப் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் எடுக்கும் முன் கவனமாக இருங்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மிதுனம்: திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவாக இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளை தொடங்கலாம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகமாகும். மாலை நேரங்களில் வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள். கடகம்: அவசியத் தேவை என்றாலும் கூட கடன் வாங்குவதைத் தவிர்த்து விடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துங்கள். வீட்டில் மனைவியுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். யோகா மற்றும் தியானம் செய்வதன் மூலம் மன அமைதி ஏற்படும். சிம்மம்: இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்ட நாள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உங்களின் அலுவலகம் தொடர்பான முக்கிய விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும் சூழல் உருவாகும். கன்னி: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். முதியவர்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். தொழிலில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களால் பிரச்னை ஏற்படும். யாரேனும் கடன் கேட்டால் கொடுக்காதீர்கள், அதன் மூலம் உங்களுக்கு பெரிய சிக்கல் ஏற்படும். மன அழுத்தம் காரணமாக உங்கள் துணையுடன் சண்டை ஏற்படும். துலாம்: பணவரவு தேவையான அளவுக்கு இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. 40 வயதை கடந்தவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படும், இதனால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கி, அவருடன் சுமூகமான உறவு ஏற்படும். விருச்சிகம்: இன்று உங்களின் மகிழ்ச்சியான மனப்பான்மை உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். காதலில் இருப்பவர்களுக்கு சில சிக்கல்கள் ஏற்படலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தனுசு: குடும்பத்தில் பெற்றோருடன் வாக்குவாதம் ஏற்படும். அலுவலக பணி தொடர்பாக சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். உடன் பிறந்த சகோதரி, சகோதரரால் சங்கடங்கள் ஏற்படும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மகரம்: இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். சுபகாரியங்கள் நடப்பதில் தடங்கல் ஏற்பட்டால் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும். கும்பம்: தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழ்நிலை அமையும். மனைவி வழி உறவினர்களால் சொத்து தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். பணம் சம்பந்தமாக குடும்ப உறுப்பினர்களிடையே தகராறு ஏற்படும் வாய்ப்பு உள்ளது அதனால் பொறுமையை கடைபிடியுங்கள். அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. மீனம்: இன்று தொலைதூர உறவினரிடமிருந்து வரும் எதிர்பாராத செய்தி குடும்பம் முழுவதற்கும் உற்சாகத்தைத் தரும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு இருந்தால் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். நீண்டநாளாக நீங்கள் எதிர்பார்த்திருந்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.

தொடர்புடைய செய்தி