இன்றைய ராசிபலன்கள் 20-06-2023

76653பார்த்தது
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு கலவையான நாளாகும். இன்று நீங்கள் எதையும் விவேகத்துடனும் ஆற்றலுடனும் செய்வீர்கள். அரசியல் ஆர்வலர்கள் அவதூறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடும். வீட்டில் பொருட்களை பழுதுபார்ப்பதற்காக பணம் செலவிடப்படும். தொழில்களில் தற்காலிகமாக இருந்துவந்த மந்தநிலை மாறும். புதிய பணி வாய்ப்புகள் அமையும். ரிஷபம்: குடும்ப வாழ்க்கையில் உறுதுணையையும், மகிழ்ச்சியையும் அனுபவிப்பீர்கள். சிறப்பு ஆடைகள் பரிசாக வழங்கப்படும். கலைத்துறையில் பணிபுரிபவர்களுக்கு புகழும் அங்கீகாரமும் கிடைக்கும். தொழில் ரீதியாக மிகவும் கவனமாக இருங்கள். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். விவசாயத்தில் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மிதுனம்: குடும்ப விவகாரங்களில் சச்சரவுகள் வராமல் கவனமாக இருங்கள். ஆரோக்கியத்திலும் மிக கவனம் தேவை. பல கடினமான சூழ்நிலைகளில் இருந்து விடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு உத்தரவு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் வளமும் உண்டாகும். தொலைதூர செய்திகள் மகிழ்ச்சி அளிக்கும். கடகம்: அரசியலில் பணிபுரிபவர்களுக்கு கௌரவம் கிடைக்கும். ஒப்பந்தத் துறையில் இருப்பவர்களுக்கு வேலையில் ஸ்திரத்தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். போட்டிகளில், தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். பணம், பொருட்கள் சேரும். சிம்மம்: தொழில் துறையில் இருந்த சிரமங்கள் தீரும். அவதூறு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவும். பணிச்சுமை அதிகரிக்கும். பணித் துறையில் புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். குடும்ப உறவில் சில சமயம் பிரச்சனைகள் வரலாம். விட்டுக்கொடுத்து செல்வது வாழ்வில் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் தரும். கன்னி: கூடுதல் செலவுகள் மூலம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்படும். வீட்டில் உறவினர்களின் வருகையை எதிர்பார்க்கலாம். புதிய முயற்சியைத் தொடங்க நல்ல நேரம். திருமணத்தில் இருந்து வந்த தடைகள், தாமதம் மாறும். ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும். துலாம்: வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். நீண்ட நாட்களாக வெளியூரில் இருந்த உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளால் அங்கீகாரமும் புகழும் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த சுணக்கம் விலகும். கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். விருச்சிகம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி இழக்க நேரிடலாம். மதிப்புமிக்க வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கப்படும். அரசியல் துறையில் பணிபுரிபவர்களுக்கும் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பேசும் வார்த்தைகளில் நிதானமாக இருப்பது நன்மை அளிக்கும். தனுசு: தொழிலதிபர்கள் தொழில் ரீதியாக போட்டிகளை சந்திக்க நேரிடும். உல்லாசப் பயணங்களில் பங்கேற்பீர்கள். கடவுளுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பது உங்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும். சமூக இலக்கியத் துறையில் இருப்பவர்களுக்கு அங்கீகாரமும் புகழும் கிடைக்கும். தம்பதிகள் ஒன்றுபடலாம். சகோதரர்களுடன் சேர்ந்து புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். மகரம்: பல்வேறு வழிகளில் நிதி ஆதாயம் எதிர்பார்க்கலாம். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பரத்திற்காக பணம் செலவிடப்படும். சகோதரர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பப் பொறுப்புகளை அதிகமாகச் செய்ய வேண்டியிருக்கும். வெளிநாட்டில் இருந்து தாயகம் வர விரும்புபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். கும்பம்: நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தந்தைவழி ஆதரவும், அதிர்ஷ்டமும் இருக்கும். புதிய முயற்சிகளைத் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான நேரம். அரசாங்கத்தால் ஆதாயம் பெறுவீர்கள். வீட்டுச் சூழல் பிரகாசமாக இருக்கும். மீனம்: தாயாரின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இடையூறுகள் ஏற்படும். நிதி ஆதாயம் எதிர்பார்க்கலாம். பணி நிமித்தமாக நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலைப்பளு காரணமாக முடங்கியிருந்த பணிகள் சுமூகமாக நடக்கும். பெண்களால் நிதியுதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி