மேஷம்: இன்று உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை முடிப்பதற்கு போதிய அவகாசம் கிடைக்கும். நிதிநிலைமை போதுமானதாக இருக்கும். கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகள் நீங்கும்.
ரிஷபம்: இன்று உங்களின் அஜாக்கிரதை மற்றும் கவனக் குறைவு காரணமாக பண இழப்புகள் ஏற்படும். சிலருக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.
மிதுனம்: இன்று உங்கள் பணிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள். தடைகளை சமாளித்து உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடித்து விடுவீர்கள். இன்று அதிகமான பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். கணவன் - மனைவி இடையேயான உறவில் பிரச்னை வரும்.
கடகம்: இன்று உங்களுக்கு பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கடன் வாங்க நேரிடும். சிலருக்கு வயிற்று வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பெற்றோர்களின் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சிம்மம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு நாள். உடல் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். மன
வலிமை அதிகரிக்க ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள். பணியிடத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும்.
கன்னி: இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஊக்கத் தொகை கிடைக்கும். குறைந்த நேரத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் உள்ள குழந்தைகளின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.
துலாம்: இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். சிலருக்கு உடல்வழி ஏற்படும். புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் இன்று தொடங்கலாம்.
விருச்சிகம்: குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும். சிலருக்கு எதிர்பாராத மருத்துவ செலவு ஏற்படும். பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதியாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கணவருடன் சண்டை ஏற்படும்.
தனுசு: இன்று உங்களுக்கு சற்று மந்தமான நாளாக இருக்கும். இன்று பணிகளைக் கையாள்வதை கடினமாக உணர்வீர்கள். உங்கள் மனைவியுடன் சண்டைகள் ஏற்படும். இன்று தேவையற்ற செலவுகளை சமாளிக்க நேரிடும். சிலருக்கு முதுது வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மகரம்: இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. சகோதரன், சகோதரி மூலம் சில பிரச்னைகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
கும்பம்: பணவரவு இருந்தாலும் வீண்செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். வேலைக்கு வாகனத்தில் செல்பவர்கள் கவனமுடன் செல்ல வேண்டும். இன்று ஆற்றலுடனும் தைரியத்துடனும் காணப்படுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.
மீனம்: இன்று நீங்கள் எடுக்கும் புதிய
முடிவுகள் வெற்றிகரமாக அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். முக்கிய
முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளவும்.