மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சில நல்ல செய்திகள் கிடைக்கும். உங்களின் புகழ் உயரும். காதல் வாழ்க்கையில் இருப்போர் துணையுடன் நீண்ட தூரம் பயணம் செய்யலாம். அப்பாவின் உதவியால் டென்ஷன் குறையும். திருமண வாழ்க்கையில் இனிமையான சூழ்நிலையை அனுபவிப்பீர்கள்.
வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் ஏற்படும் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் உங்களை ஊக்குவிக்கும்.
ரிஷபம்
இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். பரிசுகளும் மரியாதையும் கிடைக்கும். பணிபுரியும் துறையில் சில புதிய திட்டங்களில் கவனம் செலுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மத ஸ்தலத்திற்கு யாத்திரை செல்லலாம். இது உங்களுக்கு மன அமைதியைத் தரும். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்ற பணம் செலவழிப்பீர்கள். வாழ்க்கை துணைக்கு முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் நண்பரின் ஆலோசனை நன்மை தரும்.
மிதுனம்
இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் நல்லது நடக்கும். மூத்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். பணியில் சக ஊழியர்களும் உங்கள் ஆலோசனையுடன் செயல்படுவார்கள். எந்த முடிவை எடுத்தாலும், அதை கவனமாக எடுங்கள். மனைவியின் உடல்நிலை இன்று சற்று குறையக்கூடும், எனவே அதில் கவனம் தேவை. நீங்கள் யாரிடமாவது கடன் கொடுத்திருந்தால், அதை இன்று திரும்பப் பெறலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களின் நாள் அவர்களின் விருப்பப்படி கழியும். அலுவலகத்தில் சாதகமான சூழ்நிலை உருவாகும். சுப காரியங்களில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் வருமானத்திற்கும் செலவிற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில், உங்கள் நிதி நிலைமையில் வரும் நாட்களில் சிக்கல் உண்டாகும். மாணவர்களின் கல்வியில் இருந்த தடைகள் நீங்கும்.
சிம்மம்
இந்த ராசிக்காரர்கள் இந்த நாளை ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக செலவிட வேண்டும். பணியில் உங்கள் எதிரிகள் உங்களுக்கு தடைகளை உருவாக்கலாம். பிஸியான நாளாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இன்று நீங்கள் புதிய சொத்து வாங்க திட்டமிட்டிருந்தால், அதை தாராளமாக செய்யலாம்.
கன்னி
கன்னி ராசியினருக்கு இன்று நல்ல நாள் அல்ல. வியாபாரத்தில் உங்களின் கடின உழைப்பின் பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள். பேச்சிலும் நடத்தையிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் போது சில தடைகள் வரும். பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். மாலையில், நண்பர்களின் உதவியால், உங்கள் பொருளாதார நிலை வலுவடையும். உங்களைச் சுற்றியிருப்பவர்களுடன் சண்டையிடாமல் இருக்கவும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள். பணியிடத்தில், இன்று நீங்கள் சில புதிய திட்டங்களில்
வேலை செய்யலாம், இது எதிர்காலத்தில் உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரும். ரியல் எஸ்டேட் விஷயத்தில் சில பிரச்சனைகள் வரலாம், கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இன்று குழந்தைகளின் செயல்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று வீட்டில் எதிர்ப்பை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்கள் கோபம் அடையலாம். இன்று உங்களக்கு கடவுள் மீதான நம்பிக்கை மேலோங்கும்.
வேலை மற்றும் வியாபாரத்தில் சில புதுமைகளைக் கொண்டு வருவீர்கள். உங்களுக்கு வெளி நபருடன் சண்டைகள் வரலாம். எனவே, தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். விவசாய பணிகளில் இருப்போர் கவனமாக இருங்கள். வங்கியில் கடன் வாங்க நினைத்தால் அதற்கு நல்ல நாள். பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு உண்டாகும். தொழில் தொடர்பான விஷயங்களில் தந்தையிடம் ஆலோசனை பெற்ற பின்னரே முடிவு எடுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான நாள். உங்களின் தடைகள் அனைத்தும் நீங்கும். சகோதர சகோதரிகளின் திருமணத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டால், அதில் அதிக லாபம் கிடைக்கும். இன்று உங்கள் பிள்ளையின் கல்வி சம்பந்தமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அரசாங்க வேலைகளுடன் தொடர்புடையவர்கள் பணியில் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலையில் சில பிரச்சனைகள் இருக்கலாம். அவசர அவசரமாக எந்த ஒரு வேலையையும் செய்யாதீர்கள். எல்லாவற்றையும் யோசித்த பிறகு செய்யுங்கள். குடும்ப உறுப்பினர்களின் நடத்தையால் திடீர் தொந்தரவு ஏற்படலாம். வெளியே புறப்படுவதற்கு முன் பாதுகாப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொள்ளுங்கள். குழந்தைகளின் திருமணம் தொடர்பான நல்ல செய்திகள் இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் நல்ல நாள் அமையும். உடன்பிறந்தவர்களின் ஆதரவை பெறுவீர்கள். செலவுகள் அதிகமாக இருக்கும், இருப்பினும் உங்கள் நிதி நிலை சாதாகமாக இருக்கும். குடும்ப சச்சரவுகள் உங்களின் பொறுமையான நடத்தையால் தீர்க்கப்படும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது, கட்டாயம் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.