இன்றைய ராசிபலன் (05-07-2023)

59739பார்த்தது
இன்றைய ராசிபலன் (05-07-2023)
மேஷம்: எதிர்பாராத பண வரவு ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதித்து காட்டக்கூடிய வாய்ப்பு அமையும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஓரளவு போதுமானதாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். ரிஷபம்: கணவன் - மனைவி இடையே தேவையில்லாத பிரச்னை ஏற்படும். நீதிமன்றத்தில் வழக்கு இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தொடங்கும் போது அவசரம் வேண்டாம். வீட்டிற்கு வரும் உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சிகள் ஏற்படும். பழைய கடன்களை தந்து முடிப்பீர்கள். மிதுனம்: தொழில் சம்பந்தமாக நீண்ட நாள் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும். வீட்டில் மனைவி மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதுவும் இப்போது எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதியும் மனச் சோர்வும் உண்டாகும். கடகம்: இன்று நீங்கள் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் தலையீடு காரணமாக உங்கள் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படும். வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி வரும். சிலருக்கு நண்பர்களால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். சிம்மம்: அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். சிலருக்கு எதிர்பாராத சந்திப்புகள் இன்று நிகழும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகள் சுமூகமாக அமையும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டில் மகிழ்ச்சியான சூழல் அமையும். கன்னி: உடல்நலனில் அதிக கவனம் செலுத்துங்கள். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாக குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். காதலில் இருப்பவர்களுக்கு திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாக கிடைக்கும். துலாம்: யாருக்கும் பணம் தொடர்பான வாக்குறுதி கொடுக்க வேண்டாம். கணவன் - மனைவி இடையே சில சங்கடங்கள் ஏற்படும். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்த சகோதரன், சகோதரி மூலம் சில மனஸ்தாபம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் லாபம் அதிகமாக இருக்கும். விருச்சிகம்: நீங்கள் ஆசைப்பட்ட விஷயங்களை நிறைவேற்றுவதில் தடை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் வீண்பேச்சை தவிர்க்கவும். வீட்டு மனை வாங்குதில் இருந்து வந்த சிக்கல் நீங்கும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். ஆண்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தனுசு: உறவினர்களால் சங்கடங்கள் வந்து செல்லும். இன்று நீங்கள் எதிலும் சிந்தித்தும் பொறுமையுடனும் செயல்படவேண்டிய நாள் இது. நீங்கள் நினைத்த பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். மகரம்: இன்று நீங்கள் மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. மனைவி மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. கும்பம்: சிலருக்கு பணியிடத்தில் இடமாற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். முருகன் கோயிலுக்கு சென்று வந்தால் மன அமைதி கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். மீனம்: வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு நின்ற சுபகாரியம் நல்ல முறையில் நடைபெறும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் - மனைவிக்கு இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பொறுமை அவசியம்.

தொடர்புடைய செய்தி