மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூன் 19) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கோவை, சிவகங்கை, கடலூர், தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், ஈரோடு, தென்காசி, சென்னை, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், சில இடங்களில் பணிகள் முடியும் வரையும் மின்சாரம் இருக்காது.