மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட துணைமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் முன்கூட்டியே மின்சாதன பொருட்களை பயன்படுத்திக் கொள்ளவும். தண்ணீர் மின் மோட்டார், மொபைல் போன் சார்ஜ் உள்ளிட்டவற்றை செய்துகொள்ள மறக்காதீர்கள்!