பராமரிப்பு பணிகளுக்காக தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று (ஜூலை 05) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விருதுநகர், நாகப்பட்டினம், திருப்பூர், தர்மபுரி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, தென்காசி, சென்னை, கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, தேனி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், சில இடங்களில் மதியம் 2 மணி வரையும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.