இன்றைய ராசிபலன் 06-05-2024 (திங்கள்கிழமை)

15030பார்த்தது
இன்றைய ராசிபலன் 06-05-2024 (திங்கள்கிழமை)
06 மே மாதம் 2024 குரோதி வருடம் திங்கட்கிழமை சித்திரை மாதம் 23 தேய்பிறை
திதி: இன்று பிற்பகல் 1.25 வரை திரியோதசி பின் சதுர்த்தசி திதி
நட்சத்திரம்: இன்று மாலை 4.39 மணி வரை ரேவதி பின் அஸ்வினி
யோகம்: இன்று அதிகாலை 5.54 மணி வரை அமிர்த பின்பு சித்த யோகம்
சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

இன்றைய நல்ல நேரம்: காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை
இராகு காலம்: காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை
எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
குளிகை காலம்: மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை
சூலம் :- கிழக்கு
பரிகாரம் : தயிர்

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

இன்று கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். நீங்கள் இதில் முழு ஆற்றலையும் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் இன்று அமைதியாக இருக்கவேண்டும். நீங்கள் கூடுதல் பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் காணப்படும். உங்கள் துணையுடன் பேசும் போது உங்கள் பேச்சில் கவனம் வேண்டும். அஜாக்கிரதை காரணமாக இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்

இனிமையான வார்த்தைகள் மூலம் நீங்கள் பலனடைவீர்கள். இதனால் உங்கள் தன்னம்பிக்கை வளரும். நீங்கள் உங்கள் மன உறுதியால் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் நேர்மையான நம்பிக்கையான உறவு கொண்டிருபீர்கள். உங்கள் சொத்து அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

மிதுனம்

உங்கள் மனதில் தெளிவு காணப்படும். இதனால் உங்கள் செயல்களை திறமையாக ஆற்றுவீர்கள். பணியிடத்தில் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் துணையுடன் வெளிப்படையாக கருத்துக்களை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்களின் நம்பிக்கையான அணுகுமுறை காரணமாக நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

கடகம்

இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் அமைதியை உணர்வீர்கள். உங்கள் பணியில் வெற்றி பெற நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டும். உங்கள் துணையுடன் அகந்தைப் போக்கை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரலாம்.

சிம்மம்

அனுசரணையான போக்கு உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். சிறந்த பலன் காண உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிக்க நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். உங்கள் துணையுடனான உறவில் மகிழ்ச்சி நிலவ வேண்டுமெனில் நீங்கள் உங்கள் துணையிடம் சகஜமாகப் பேச வேண்டும்.

கன்னி

இன்று உங்களுக்கு சாதகமான நாள். பல வாய்ப்புகள் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். நீங்கள் பொறுப்புடனும் சிரத்தையுடனும் பணியாற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். உங்கள் துணையுடன் இனிமையான வார்த்தைகளை பேசுவீர்கள். இது உங்கள் துணையை மகிழ்விக்கும். பணத்தை நீங்கள் பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

துலாம்

இன்றைய நிகழ்வுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். நீங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் நேர்மையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். நிதிநிலைமை உங்களுக்கு சாதகமாகவும் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள போதுமானதாகவும் இருக்கும்.

விருச்சிகம்

இன்று செயல்கள் சீராக நடக்க சாதகமாக இருக்காது. இன்று அதிக பொறுப்புகள் காணப்படும். இன்று உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. நீங்கள் உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொள்வீர்கள். உறவில் மகிழ்ச்சி நிலவ இத்தகைய போக்கை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்படும். எனவே பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.

தனுசு

இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. நீங்கள் சமநிலை இழப்பீர்கள். நற்பலன்கள் காண எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். பணிகள் சலிப்பூட்டுவதாக இருக்கும். நீங்கள் சிறந்த பணி மாற்றம் விரும்புவீர்கள். உங்கள் துணையின் மனதில் காயத்தை ஏற்படுத்தும். இதனால் உறவின் ஸ்திரத்தன்மை பாதிக்கும். இன்று அதிக செலவுகள் செய்ய நேரலாம்.

மகரம்

இன்று சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். முக்கிய இலக்குகளை அடைய திட்டமிடலாம். பணியிடத்தில் அதிக வாய்ப்புகள் காணப்படும். நீங்கள் பணிகளை திறமையாகவும் விரைவாகவும் ஆற்றுவீர்கள். நீங்கள் உங்கள் துணையுடன் சிறந்த அமைதியனா தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். உங்களின் சேமிப்பு ஆற்றல் சிறந்த முறையில் அதிகரிக்கும்.

கும்பம்

அஜாக்கிரதை மற்றும் கவனமின்மை காரணமாக உங்களுக்கு வளர்ச்சி அளிக்கும் சில மதிப்பு மிக்க வாய்ப்புகளை இழப்பீர்கள். பணியிடத்தில் வெற்றிகள் அதிக அளவில் காணப்படாது. இதனால் பணிகள் தேங்கிக் கிடைக்கும். அற்ப காரணங்களுக்காக உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். உங்கள் செலவுகளை கட்டுபடுத்த இயலாது. சிக்கனம் கடைபிடிக்க வேண்டும்.

மீனம்

இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. பதட்டமான சூழ்நிலை கவலை அளிக்கும். நீங்கள் சில தடைகளை சந்திப்பீர்கள். மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்கள் மேலதிகாரியுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். குடும்ப பிரச்சினை சிலவற்றின் காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இன்று நிதிக் கட்டுப்பாடு காணப்படும். இன்று கூடுதல் செலவுகள் செய்ய நேரும்.

தொடர்புடைய செய்தி