இன்று (ஜூன். 08) உலக மூளைக்கட்டி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் Brain Tumour என அழைக்கப்படுகிறது. மூளையில் செல்கள் அசாதாரண அளவில் பெருகுவது தான் மூளைக்கட்டி ஆகும். இது புற்றுநோய்க் கட்டி மற்றும் சாதாரண கட்டி என 2 வகையாக பிரிக்கப்படுகிறது. செல்களின் எண்ணிக்கை மூளையில் அதிகரிப்பதால் மண்டை ஓட்டில் அதிக அழுத்தம் தென்படும். இந்த பாதிப்பு குறித்த விழிப்புணர்வு இன்று உலகம் முழுவதும் ஏற்படுத்தப்படுகிறது.