பொங்கல் பரிசு தொகுப்பு பெற இன்றே கடைசி நாள்

67பார்த்தது
பொங்கல் பரிசு தொகுப்பு பெற இன்றே கடைசி நாள்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 8 நாட்களாக ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் நடைபெற்றது. இதுவரை 75 சதவீத ரேஷன் அட்டைதாரர்கள், பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுள்ளனர். பரிசு தொகுப்பை இதுவரை வாங்காதவர்களுக்கும் விரைந்து வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று (ஜன., 18) மாலை வரை பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி