ஒவ்வொரு ஆண்டும் தேவசயன ஏகாதிசிக்கு பிறகு சிவனின் மாதமான சாவன் மாதம் தொடங்குகிறது. வட மாநிலங்களில் ஆடி மாதத்தை சாவன் மாதம் என்று அழைப்பது வழக்கம். இந்த மாதத்தில் வரும் சிவராத்திரி மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் பக்தர்கள் நடந்தே சென்று நீர் நிலைகளில் இருந்து நீர் கொண்டு வந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இந்த சிவராத்திரி வருடாந்திர சிவராத்திரிக்கு நிகரானதாகும்.