காதலர் தின வாரத்தின் ஐந்தாவது நாளான பிப்ரவரி 11 ஒவ்வொரு ஆண்டும் வாக்குறுதி நாளாக (Promise Day) கொண்டாடப்படுகிறது. காதலர்கள் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருப்பதற்கும், எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்பதற்கும் உறுதியளிக்கும் நாளாக இந்த நாள் உள்ளது. இந்த தினத்தில் உங்கள் துணையிடம் நீங்கள் அளிக்கப் போகும் வாக்குறுதி, உங்கள் உறவில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.