இறைவனிடம் கையேந்துங்கள்.." போன்ற அல்லாஹ்வின் பாடல்களை பாடி, தனது கம்பீரக் குரலால் மக்களை கட்டி வைத்திருந்தவர் நாகூர் அனிபா. திமுககாரரான இவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியை வாழ்த்தி பல பாடல்களை பாடியுள்ளார். இன்றளவும் திமுக மேடைகளில் "கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே.." என்கிற பாடல் ஒலிக்க மறைப்பதில்லை. அவரது நினைவு தினத்தில் முதலமைச்சர் அவரது படத்திற்கு மாலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.