பிரதோஷ நாளில் சிவாலயங்களுக்கு சென்று நந்திக்கு பின்பு நின்று கொம்புகளுக்கு இடையே லிங்கத்தை தரிசிக்க வேண்டும். வலது பக்கம் சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை சென்று திரும்பி, மீண்டும் நந்தியின் முன் நின்று லிங்கத்தை தியானித்து விட்டு இடதுபுறமாக செல்ல வேண்டும். கோமுகி நீர் தொட்டி வரை சென்று பின்னர் மீண்டும் லிங்கத்தை தரிசிக்க வேண்டும். இவ்வாறு மூன்று முறைகள் செய்தால் பாவம் நீங்கி அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.