கோயம்புத்தூர்: டிஎன்பிஎல் 9ஆவது சீசன் கிரிக்கெட் தொடரின் இன்றைய (ஜூன் 6) இரண்டாவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த திருப்பூர் அணி 20 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்துள்ளது. தொடர்ந்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சேப்பாக் அணி விளையாடி வருகிறது.