9-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை (ஜூன் 5) தொடங்கி ஜூலை 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மோதும். லீக் போட்டி முடிவில் முதல் 4 அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும். நாளைய தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.