TNPL டி20 கிரிக்கெட் தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் கடந்த 5ஆம் தேதி தொடங்கி, நடந்து முடிந்தன. 2ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்தது. தொடர்ந்து, இந்த தொடரின் 3ஆவது கட்ட லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் நடைபெறவுள்ளன. இந்த தொடரின் நாளைய (ஜூன் 21) ஆட்டத்தில் கோவை - நெல்லை அணிகள் மோதவுள்ளன. சரியாக இரவு 7.15 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கவுள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.