TN: கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தற்கொலை முயற்சி

69பார்த்தது
சேலம்: மின்னாம்பள்ளியைச் சேர்ந்த இளம்பெண், சேலம் அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கிறார். இவருக்கு ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த மோகனபிரியன் என்பவருடன் காதல் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இன்று(ஏப்.16) காலை சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருவரும் சந்தித்தபோது ஏற்பட்ட தகராறில் மோகன பிரியன் மாணவியை கத்தியால் குத்திவிட்டு,  தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி