திருவாரூர் அடுத்த கொரடாச்சேரி அருகே ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணை பாலியல் சீண்டல் செய்து கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பெருமாளகரம் கிராமத்தை சேர்ந்த சுதா (40) என்ற பெண் ஆடு மேய்க்க சென்றார். அப்போது அந்த வழியாக வந்த முருகன் (48), அஜித்குமார் (38) ஆகியோர் சுதாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது ஆசைக்கு சுதா இணங்க மறுத்த நிலையில் அருகில் இருந்த பாண்டவையாற்றில் தள்ளி சுதாவை நீரில் மூழ்கடித்து கொலை செய்தனர். தொடர்ந்து, இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.